Review Overview
Rating
Masala Entertainment and Powerful technician with normal predictable storyline
Summary : ஒளிப்பதிவும் சண்டை காட்சியும் பெரிதாக ரசிகர்களை கவர்ந்துள்ளது
The Legend Movie Review
Masala Entertainment and Powerful technician with normal predictable storyline, Visuals and action sequence impressive especially second half #HJ BGM and fight scenes Top Level, #SaravananArul tried his level best, #YogiBabu #Vivek performed well, Watchable
மிகப்பெரிய பொருட்செலவில் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களுடன் இணைந்து ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் சரவணன் அருள் அறிமுக நாயகனாக நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் தி லெஜன்ட் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது குறிப்பாக பிரபு விஜயகுமார் விவேக் நாசர் யோகிபாபு மயில்சாமி இந்த படத்தில் நடித்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது தி லெஜன்ட் திரைப்படம் அந்த எதிர்பார்த்த அனைத்தையும் பூர்த்தி செய்ததா என்பதை பார்க்கலாம்
அறிவியல் அறிஞராக வரும் சரவணன் அருள் எண்ணற்ற சாதனைகளை செய்து அனைவரையும் வியக்க வைக்கிறார் அதன் பிறகு தனது சொந்த ஊருக்கே திரும்பி தன் மக்களுக்கு பயன்படும் வகையில் ஏதாவது செய்யவேண்டும் என்று முடிவெடுத்து தன் சொந்த ஊருக்கு வருகிறார் சரவணன் ஒரு அங்கு ஒரு கல்லூரியையும் எடுத்து நடத்துகிறார் தன் பள்ளிப் பருவ நண்பரான ரோபோ சங்கரை சந்திக்கிறார் அதன் பிறகு சர்க்கரை வியாதிகள் தினம் தினம் அவதிப்பட்டு வரும் ரோபோ சங்கரை ஒரு நாள் திடீரென்று மரணம் அடைகிறார் இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் சரவணன் இந்த நோய்க்கான தீர்வை கண்டுபிடிப்பது இனி ஒருவருக்கு சர்க்கரை வியாதி வரக்கூடாது என்றும் தீவிரமாக முடிவெடுக்கிறார் அதை எவ்வாறு வந்த தடைகளை தகர்த்து எறிந்தார் என்பதே மீதிக்கதை
மிகப்பெரிய பொருட்செலவில் பாடல்கள் சண்டைக்காட்சிகள் என்று அனைவரையும் கவரும் வண்ணம் மிகவும் கலர்ஃபுல்லாக வடிவமைத்துள்ளனர் குறிப்பாக படத்தின் இரண்டாம் பாதியில் வரும் சண்டை காட்சிகள் அனைத்தும் அருமை அதற்கு இணையாக பின்னணி இசையை கொடுத்து மிரட்டியுள்ளார் ஹாரிஸ் ஜெயராஜ் அறிமுக படம் என்றாலும் தன்னுடைய முயற்சியை முள்ளு பொங்கும் கொடுத்துள்ளார் சரவணன் அவர்கள் குறிப்பாக சண்டைக் காட்சிகள் நடனக் காட்சிகள் ரொமான்ஸ் சென்டிமெண்ட் என அனைத்திலும் தன்னால் முடிந்த அளவு பங்களிப்பினை கொடுத்துள்ளார் ரோபோ சங்கர் நடிகர் பிரபு மற்றும் குறிப்பாக விவேக் தனது பங்களிப்பினை சரியாக செய்துள்ளனர்
படம் ஆரம்பம் முதலே பிரம்மாண்ட ரசிகர்களை கவரும் விதமாகவும் மாஸ் ரசிகர்களுக்கு ஏற்ற விதத்திலும் கதை நடத்தியுள்ளனர் ஜேடி ஜெர்ரி இருப்பினும் திரைக்கதையில் தேவையில்லாத சில காட்சிகளும் பாடல்களும் படத்தில் காணமுடிகிறது. ஒளிப்பதிவும் சண்டை காட்சியும் பெரிதாக ரசிகர்களை கவர்ந்துள்ளது.
மொத்தத்தில் பிரம்மாண்டம் அதிரடி சண்டைக் காட்சி கலர்புல்லான நடனக் காட்சியில் பாடல்கள் என்று விரும்பும் ரசிகர்கள் அனைவருக்கும் இந்த லெஜெண்ட் ஒரு விருந்து.