Review Overview
3/5
Summary : காதல் கலந்த திரில்லர் ரசிகர்களுக்கு யாக்கை ஒரு விருந்து.
Yaakkai Movie Review
மருத்துவ மனைகளில் பணத்திற்க்காக மக்கள் உயிருடன் விளையாடும் நபர்களினால் ஏற்படும் விளைவுகள் தான் இந்த யாக்கையின் முக்கிய அம்சம்.
தனக்கு என்ன ரோல் வரும் என்பதினை அறிந்து கதைக்களத்தினை தேர்ந்தெடுப்பவர் கிருஷ்ணா. இதுவும் அது போல அவருக்கு சீரியான கதாபாத்திரம். இந்த படத்தில் சிறிது ஆக்ஷ்ன் வேட்டைகளில் இறங்கியுள்ளார். ரசிக்கும் படி உள்ளது.
படத்தின் மிக முக்கிய பாத்திரம் வில்லன் சோமா சுந்தரம். அவளோ இயல்பான அலட்டாத நடிப்பு. மறுபடியும் ஒருமுறை தான் ஜோக்கர் இல்லை என்பதினை நிரூபித்துள்ளார். படத்தில் ராதா ரவி, பிரகாஸ்ராஜ் என்று பலர் வந்து போகின்றனர். அவர்களில் பங்கினை சிறப்பாக செய்துள்ளனர்.
படம் வெளிவரும் முன்பே பாடல்களும் அனைத்தும் ரசிக்கும் படி உள்ள நிலையில் அதனை கண்களுக்கு விருந்தாக காண்பித்துள்ள காமெராவுக்கு நன்றி. குறிப்பாக படத்தின் பின்னணி இசை தரம்.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் குழப்பத்தினை ஏற்படுத்தினாலும் அதனை ரசிகர்களுக்கு புரியும் விதத்தில் காண்பித்துள்ளார். படத்தின் நீளத்தின் காரமாக சில இடங்களில் தொய்வு ஏற்படுகிறது. குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம்.
காதல் கலந்த திரில்லர் ரசிகர்களுக்கு யாக்கை ஒரு விருந்து.
Rating: 3/5