Review Overview
3.25/5 (Hit)
Summary : அருண்விஜய் வெற்றி குதிரை என்பதினை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்.
Kuttram23 Movie Review
நீண்ட இடைவெளிக்கு பின்னர் அருண் விஜய் நடிப்பில் என்னை அறிந்தால் வெற்றியினை தொடர்ந்து பல பிரபலங்களின் பாராட்டுகளை பெற்று வெளிவந்துள்ள குற்றம் 23 படம். ரசிகர்களின் தேவைகளினை பூர்த்தி செய்யும் ஒரு ஆக்ஷ்ன் கலந்த கிரைம் திரில்லர் படம்.
ஒரு முக்கிய நபரின் மனைவி கொலைவழக்கினை சந்திக்க நேரிடும் வெற்றி மாறனுக்கு மேலும் மேலும் சமூகத்தில் நடக்கும் பெரும் குற்றங்களை கண்டு பிடிக்கும் கதை குற்றம் 23.
அருண்விஜய் மிடுக்கான தோற்றம், ரொமான்ஸ் செய்யும் முக பாவனை என்று முழு தேர்ந்த நடிகரின் அனுபவம். என்னை அறிந்தால் விக்டர் என்று பெரு வாரியான ரசிகர்களின் ஈர்ப்பினை பெற்றவர் இனிமேல் வெற்றி மாறன் என்றும் அழைக்க படுவார்.
படம் முழுக்க விசாரணை என்று இருந்தாலும் இடையிடையே காதல் காட்சிகளை கட்சிதமாக பொறுத்தியுள்ளார் இயக்குனர். படத்திற்கு இசை பெரும் பலம் இல்லை என்றாலும் குறை சொல்லும் வகையில் இல்லை.
படத்தில் தம்பி ராமையா நம்மை ரசிக்க வைக்கிறார். லாஜிக் மீறல் இருந்தாலும் இந்த கதைக்களத்திற்கு தேவையானவை. படத்தின் முடிவு காட்சி செயற்கையாக இருக்கிறது.
அருண்விஜய் வெற்றி குதிரை என்பதினை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார். திரைக்கதையினை சரியான விகிதத்தில் அமைத்து அனைத்து ரசிகர்களையும் ரசிக்க வைக்கிறது குற்றம் 23.
ஒரு முறை கண்டிப்பாக தியேட்டரில் பார்த்து ரசிகக்கலாம்.
Rating: 3.25/5