Review Overview
2.25/5 (Average)
Summary : ஒரு புதுமுக இயக்குனர். படத்தில் சாதிக்க துடிக்க நினைக்கும் ஹீரோ. இவர்களுக்காக இந்த படத்தினை ஒரு முறை பார்க்கலாம்.
Mupparimanam Movie Review
இந்த வருடத்தின் முதலில் தோல்வி படத்துடன் துவங்கிய சந்தனு தற்போது ஒரு சராசரி படத்தினை கொடுக்க முயற்சிக்கிறார். புதுமுக இயக்குனர் எனவே பெரும் எதிர் பார்ப்பு இல்லாமல் இருக்கும் நமக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுக்காது.
வழக்கம் போல காதல், அடிதடி, பழிவாங்கல் எந்த நேரத்திலும் படம் முடியும் என்று எதிர் பார்க்கும் இரண்டாம் பாகம். நாம் பொதுவாக படத்தின் முழு கதையினை கூறுவதில்லை. எனவே நேராக விமர்சனத்துக்கு சொல்வோம்.
சந்தனு அவரால் முடிந்த அளவு தன்னுடைய நடிப்பினை வெளி கொண்டு வருகிறார். ஆனாலும் ரசிகர்கள் அவரிடம் இன்னும் எதிர் பார்க்கின்றனர். ஆக்ரோஷம், காதல் என்று இரண்டையும் கலந்து அடிக்கிறார்.
ஸ்ருஷ்டி எதிர் மறை வேடம் இருந்தாலும் அவரின் அனுபவத்தின் மூலம் அந்த பாத்திரத்தினை சரியா புரிந்து நடிச்சிருட்கிறார். வரும் காலங்களில் நல்ல படங்கள் வந்து சேரும்.
சண்டைக்காட்சிகள் பெரிதாக இல்லாவிட்டாலும் ரசிக்கும் படி உள்ளது. வில்லன் பிரகாஷ் அவரின் பங்கினை சிறப்பாக செய்துள்ளார். படத்தின் பாடல்கள் மிகவும் சுமார். ரசிகர்களுக்கு வேதனை அளிக்கிறார்.
படம் முழுவதும் ஒரு சீராக சென்றாலும் அதில் சில கருத்துக்களை வைத்துள்ள இயக்குனருக்கு ஓகே. ட்விஸ்ட் எக்கச்சக்கமாக உள்ளது. பிளாஷ் பாக் காட்சிகளின் சில இடங்களில் தூக்கிருக்கலாம்.
ஒரு புதுமுக இயக்குனர். படத்தில் சாதிக்க துடிக்க நினைக்கும் ஹீரோ. இவர்களுக்காக இந்த படத்தினை ஒரு முறை பார்க்கலாம்.
Rating: 2.25/5