Review Overview
Rating
Emotional deductive thriller with fun elements
Summary : ஒரு நகைச்சுவை கலந்த துப்பறியும் கதைகளை தேர்ந்தெடுத்து பார்க்கும் ரசிகர்களுக்கு ஏஜென்ட் கண்ணாயிரம் விருந்து
Agent Kannayiram Movie Review
Emotional deductive thriller with fun elements Santhanam perfectly matched the role and gave his level best, Comedy scenes worked well especially Munishkanth portion, Riya neat performance, BGM and Visuals were good, Watchable
பொதுவாக வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தன் நகைச்சுவை மற்றும் புதுமையின் மூலம் ரசிகர்களை ரசிக்கும்படியான திரைப்படங்களை தேர்ந்தெடுப்பதில் சந்தானம் வல்லவர் அதில் இன்று வெளியாகி இருக்கும் மனோஜ் இயக்கத்தில் ஏஜென்ட் கண்ணாயிரம் எந்தவகையில் மக்களை ரசிக்க வைத்துள்ளது என்பது காண்போம்
ஜமீன்தார் திருமணம் செய்து கொள்ளாத மனைவியின் குழந்தையாக சந்தானம் இருக்கிறார் இதனால் அனைத்து விதமான அவமானங்கள் வேதனைகளை அனுபவித்துக் கொண்டு வருகிறார் சிறுவயதிலிருந்தே இருப்பினும் சிறு வயதில் இருந்தே சந்தானத்திற்கு துப்பறிவது மிகவும் பிடித்த விஷயமாக உள்ளது அதிலும் வாலிபர் ஆனபிறகு துப்பறியும் ஏஜெண்டாக மாறுகிறார் அவ்வாறு ஏஜெண்டாக வேலை பார்க்கும் சந்தானத்திற்கு அவங்க அம்மாவின் இறப்பு செய்தி கேட்டு ஊருக்கு திரும்பும் அவருக்கு அம்மாவின் முகத்தை கூட காட்டாமல் அனைவரும் இவருக்கு ஏமாற்றத்தை கொடுக்கின்றனர் இந்த நிலையில் ஒரு பெரிய கொலை கேஸ் ஒன்று துப்பறிவு எதற்காக சந்தானம் இடம் கிடைக்கிறது அந்த கேசினி கையிலெடுக்கும் சந்தானத்தை வேறு திசையில் திருப்ப பல எதிரிகளும் பல முயற்சிகளை மேற்கொள்கிறார்கள் இருப்பினும் அதனையும் மீறி அந்த கேசினி எப்படி கண்டுபிடித்தார் என்பதே மீதிக்கதை
சந்தானம் இந்த படத்திற்காக மிகவும் மெனக்கெட்டு தன் கதாபாத்திரத்தை சிறப்பாக விளங்க வேண்டும் என்பதில்லை முயற்சி செய்து அதில் வெற்றியும் காண்கிறார் படத்தின் கதாநாயகி சில காட்சிகளில் வருகிறார் நம் மனதைக் கவர்கிறார் , குறிப்பாக படத்தில் சந்தானத்தின் அம்மாவும் அப்பாவும் நடித்துள்ள நபர்கள் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்துள்ளனர் காமெடி காட்சிகள் என்ற பட்சத்தில் சந்தானத்தின் வரும் காட்சிகளும் சரி அதற்கும் மேலாக முனிஸ்காந்த் காட்சிகளில் தியேட்டர் அதிர்கிறது படத்தின் திரைக்கதையில் கொஞ்சம் விறுவிறுப்பு கம்மியாக இருக்கிறது இருப்பினும் ரசிகர்கள் அடுத்த காட்சிகளை நகர்த்திக்கொண்டு செல்கிறார் இயக்குனர் அதற்காக அவரை பாராட்டலாம் யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் பெரிதாக இல்லை என்றாலும் ரசிக்கும்படி உள்ளது ஆனால் பின்னணி இசையில் படத்திற்கு தேவையான பலத்தை கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவு எடிட்டிங் என்று அனைத்திலும் திறம்பட செய்து வைத்துள்ளனர் தொழில்நுட்ப வல்லுநர்கள்
ஒரு நகைச்சுவை கலந்த துப்பறியும் கதைகளை தேர்ந்தெடுத்து பார்க்கும் ரசிகர்களுக்கு ஏஜென்ட் கண்ணாயிரம் விருந்து