Review Overview
Rating
Suspense thriller movie with interesting investigation
Summary : சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு இந்த படம் நல்ல தேர்வு
Battery Movie Review
Suspense thriller movie with interesting investigation, BGM and visual perfectly connected with the movie especially first half, some of dull moments is there but still engaging with suspense thriller fans, watchable
பொதுவாக சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்திற்கு என்றே சினிமாவில் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு அதிலும் கொலை கொலையாளியை கண்டு பிடிப்பது என்று சுவாரஸ்யமாக கதையை நகர்த்தினாள் ஈசியாக ரசிகர்கள் மனதில் வென்றுவிடலாம் அந்த வகையில் மணிபாரதி இயக்கத்தில் செங்குட்டுவன் மற்றும் அபிராமி நடிப்பில் வெளிவந்திருக்கும் பேட்டரி திரைப்படம் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்ததா என்பதை காண்போம்.
ஒரு கொலை நடைபெறுகிறது அதனை தொடர்ந்து அதை விசாரிக்கும் போலீஸ் ஒரு கொலை செய்யப்படுகிறார் அதன் பிறகு அதைப் போலவே மேலும் ஒரு குறை அரங்கேறுகிறது அதனை புதியதாக வேலைக்கு சேரும் செங்குட்டுவன் விசாரணை செய்கிறார் அந்த மர்ம கொலைகளுக்கான காரணம் என்ன என்பதை விசாரிக்கும் செங்குட்டுவனுக்கு பல அதிர்ச்சித் தகவல் காத்திருக்கிறது அது என்ன என்பதே இந்த படத்தின் கிளைமாக்ஸ்.
இந்த படத்திற்கு பலம் என்று பார்த்தால் முக்கியமாக இசையமைப்பு ஏனென்றால் பின்னணி இசையினை அதிரடியாக மிரட்டியுள்ளார் சித்தார்த் அதுமட்டுமில்லாமல் வசனங்களும் படத்திற்குத் தேவையான ஒளிப்பதிவை கட்சிதமாக கொடுத்துள்ளனர் படத்தில் பல இடங்களில் விசாரணைக் காட்சிகள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது அதிலும் குறிப்பாக ஆரம்பகட்ட விசாரணை படத்தில் விறுவிறுப்பினை அதிகப்படுத்துகிறது.
இயக்குனர் சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்திற்கு தேவையான கதையினை மிகக் கச்சிதமாக தேர்வு செய்துள்ளார் ஆனால் சில இடங்களில் தொய்வினை காணமுடிகிறது அதனை கொஞ்சம் சரி செய்திருக்கலாம் சில காட்சிகள் நீளமாக உள்ளது போன்ற பீல் கொடுக்கிறது
சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு இந்த படம் நல்ல தேர்வு.