Review Overview
Rating
3.5/5 Don't miss the Haris-Vivekh Entertainment
Summary : தாராளமாக குடும்பத்துடன் ரசிக்க இந்த தாராள பிரபு
Dharala Prabhu Movie Review
டிவி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகம் ஆகி பின்னர் சினிமாவில் தன்னை தக்க வைத்து கொள்பவர்கள் சிலரே அந்த வரிசையில் இந்த ஹாரிஸ் கல்யாணும் சேருவதற்கு தரமான படங்களை தேர்ந்தெடுத்து வருகிறார். ஹிந்தி படத்தின் தழுவல் என்றாலும் தமிழ்மக்களுக்கு ஏற்றார் போல் படத்தினை கொடுத்தமைக்கு இயக்குனருக்கு வாழ்த்துக்கள். படத்தில் குறிப்பாக பாசிட்டிவ் மைண்ட் செட்டுடன் வரும் ஹாரிஸ் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார். காதல் செண்டிமெண்ட் மற்றும் நகைச்சுவை காட்சிகளில் பின்னி எடுக்கிறார்.
படத்தின் முக்கிய பலம் விவேக் அவரின் இயல்பான காமெடிகளில் கொஞ்சம் அடல்ட் வசனங்கள் சேர்த்து அனைவரின் ரசனையும் ரசிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறார். படம் முழுவதும் கலர் புல்லாக காட்சிகளை வழங்கியுள்ளார் மற்றும் ஹீரோ ஹீரோயின் அவ்வளவு அழகாக காட்டியதற்கு இயக்குனருக்கு வாழ்த்துக்கள். படத்தில் எந்த ஒரு காட்சியும் முகம் சுளிக்கும்படியும் இழுவையாகவும் இல்லை. சிறப்பான திரைக்கதையின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த வகையில் கொடுத்துள்ளார்.
மொத்தத்தில் குழந்தையின்மை ஒரு வியாபாரமாக மாறி வரும் நிலையில் அதனை அதில் உள்ள முக்கியத்துவத்தை சிறப்பாக கூறியுள்ளனர்.
தாராளமாக குடும்பத்துடன் ரசிக்க இந்த தாராள பிரபு