Ghajinikanth Movie Review
பாஸ் என்கிற பாஸ்கரன் படத்திற்கு பிறகு ஒரு முழு நீள நகைச்சுவை படத்தில் நடித்துள்ளார் ஆர்யா. படத்தில் நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லாமல் ஆடுகளம் நரேன் மற்றும் சதிஷ் பின்னி எடுத்துள்ளனர். அதிலும் ஆள்மாறாட்டம் செய்யும் காட்சிகள் ரசிக்கும் ரகம். படம் முழுவதும் அழகு பதுமையாக சயீஷா வருகிறார். padaththi முதல் பாதியை விட இரண்டாம் பத்தி மிக சிறப்பாக உள்ளது. சிரிப்பு உத்திரவாதம் தரும் காட்சிகள் படத்திற்கு பலம்.
தர்மத்தின் தலைவன் படத்தின் மூலம் இந்த படத்தினை துவங்குகின்றனர். ஆர்யாவுக்கு நியாபக மறதி. அதுவே அவருக்கு மிக பெரிய சிக்களினை ஏற்படுத்துகிறது. கண்டவுடன் காதல் சயீஷா. அவரை காதலிக்க தன் குறையினை மறைக்கிறார். சயீஷா தந்தை இடம் நல்ல பெயர் வாங்க ஆர்யா எடுக்கும் முயற்சி கை கூடியதா என்பது மீதி கதை.
கதை மிகவும் சிம்பிள் ஆகா இருந்தாலும் அதனை காட்சி வடிவில் நகைச்சுவை கலந்து கொடுத்தரக்கு இயக்குனருக்கு வாழ்த்துக்கள். பாடல்கள் ரசிக்கும் படி உள்ளது. முதல் படங்களில் கொஞ்சம் கிளாமராக எடுத்தாலும் தன்னால் குடும்பக்கதைகளையும் எடுக்க முடியும் என்பதினை நிரூபித்துள்ளார் இயக்குனர்.
சில காட்சிகள் நம்மால் யூகிக்க முடியும் அளவில் உள்ளது. இருந்தாலும் ரசிக்கும் படியாகவே உள்ளது. ஒரு பொழுதுபோக்கு படத்தினை காண வரும் ரசிகர்களுக்கு இந்த கஜினிகாந்த் ஒரு விருந்து
KollywoodTimes Rating (3.25/5)