Kaththi Sandai Review
கத்தி சண்டை – பல வருடங்களுக்கு பிறகு சுராஜ், வடிவேலு இணையும் திரைப்படம். அவருக்கே உரிய அதிரடி மசாலா ரகமான கமர்சியல் படத்தினை சிறிது மெசேஜ் வைத்து கொடுத்துள்ளார் இயக்குனர். மக்களிடம் இருந்து எடுக்கப்படும் பணம் அனைத்தும் மக்களே அரசியல் வாதிகளிடம் இருந்து எடுத்து கொள்வர் என்பது தான் படத்தின் அடிப்படை தளம்.
வழக்கமான வேலை இல்லாத ஜாலி பையனாக விஷால். அவரிடம் பயந்து அவருக்கு காதல் உதவி செய்யும் சூரி. பொய் பொய்யாக சொல்லி தமன்னாவினை தன் வாச படுத்துகிறார் விஷால். விஷால் குத்தாட்டம் போடுகிறார் தமன்னாவுடன். பெரிய போலீஸ் அதிகாரியாக தமன்னாவின் அண்ணன். ஒரு பெரிய லாரி நிறைய பணத்தினை கண்டு பிடிக்கிறார். அந்த படம் யாருடையது,
பெருமளவு காமெடியினை நம்பி படம் எடுத்திருக்கிறார் சுராஜ். படம் முழுவதும் காமெடி காட்சிகள் நிரம்பி வழிகிறது. விஷால் சண்டை காட்சிகளில் பின்னுகிறார். அவருக்கு இணையாக கொள்ளும் அழகில் நம் மனதினை கொள்ளை கொள்கிறார் தமன்னா.
வடிவேலு வரும் காட்சிகளில் அரங்கம் அதிர்கிறது. அவருடன் சேர்ந்து அவரின் கூட்டாளிகளும் கலக்கல். குதிரை சவாரி, நண்பன் வேடம் என்று தனக்கே உருவான ஸ்டைலில் கலக்கல் பண்ணுகிறார். பாடல்கள் ஓகே ராகம். பாடல்கள் அனைத்தும் கலர்புல்லாக கொடுத்திருக்கிறார்கள். ரசிகர்களின் தேவை அறிந்து காமெடிய, ஆக்சன், செண்டிமெண்ட் என்று கொடுத்திருக்கிறார்.
படத்தின் இறுதியில் வரும் காட்சிகள் மனதை நெருடுகிறது. முக்கியமாக படத்தின் இன்டெர்வல் காட்சியில் அருமை. மொத்தத்தில் லாஜிக் எதுவும் பார்க்காமல். ஒரு முழு நேர காமர்ஷியல் விரும்பிகளுக்கு இந்த படம் நல்ல ஒரு விருந்து.
கத்தி சண்டை – அதிரடி நகைச்சுவை சண்டை