Review Overview
2/5 (Average)
Summary : ஒரு மாஸ் மசாலா படத்திற்கு தேவையான அனைத்தும் இருந்தும் ஏமாற்றம்.
Motta Shiva Ketta Shiva Movie Review
பார்த்து பார்த்து போர் அடித்து போன மாஸ் மசாலா படம் தான் இந்த மொட்ட சிவா.. கெட்ட சிவா.. மிக நீண்ட நாட்களாலுக்கு வேற இயக்குனரின் இயக்கத்தில் லாரன்ஸ் நடிக்கும் படம்.
வழக்கம் போல தமிழ்நாடே தன்னுடைய கண்ட்ரோல்ல வச்சிருக்கும் ஒரு ரவுடி. அவரே அடக்கியே தீருவேன் என்று சத்யராஜ். இப்படி ஆரம்பம் ஆகிறது கதை. லாரன்ஸ் ஆரம்பத்தில் ஜிகே வுக்கு ஆதரவாகவும், சத்யராஜிற்கு எதிராகவும் செயல்படுகின்றார், அப்படி ஒரு கட்டத்தில் ஜிகேவின் தம்பி வம்சி ஒரு பெண்ணை கற்பழிக்க, அதிலிருந்தும் லாரன்ஸ் காப்பாற்றுகிறார்.
சத்யராஜ் அந்த பெண்ணை பற்றியும், போலிஸ் வேலையை பற்றியும் லாரன்ஸிற்கு அரை மணி நேரம் கிளாஸ் எடுக்க, அதன் பிறகு ஹீரோ சும்மா இருப்பாரா? ஜிகேவின் சாம்ராஜியத்தை எப்படி முறியடிக்கின்றார் என்பதே மீதிக்கதை.
பொதுவாக மாஸ் கதைகள் என்றால் லாரன்ஸ்க்கு மிக கச்சிதமாக பொருந்தும். ஆனாலும் அவரை அந்த வேடத்தில் அதிகப்படிய பாத்ததினால் ஒரு விதமான வெறுப்பு ஏற்படுகிறது. எங்கு எங்கோ செல்கிறது கதை. இது காணாது என்று படம் முழுவது பன்ச் டைலாக் பேசி கொண்டே இருக்கிறார். இசை இரைச்சல்.
பாடல்களில் அழகாக இருக்கிறார் நிக்கி கல்ராணி. ஆனாலும் அவரை பாடலுக்கு மட்டும் உபயோக படுத்தி இருப்பது கொஞ்சம் வருத்தம் தான்.
வழக்கம் போல நடத்தில் வெளுத்து வாங்குகிறார் லாரன்ஸ். அவருக்கு இணையாக கொலு கொலு உடம்பாக இருந்தாலும் சிறிது ஈடு கொடுத்து ஆடுகிறார் நிக்கி கல்ராணி.
ஒரு மாஸ் மசாலா படத்திற்கு தேவையான அனைத்தும் இருந்தும் ஏமாற்றம்.