Review Overview
3/5
Summary : ஒரு தரமான ஆக்சன் படம் பண்டிகை
Pandigai Movie Review
Movie Name: Pandigai
Release Date: 14 Jul 2017
Duration: 2 hrs 11 mins
Cast: Anandhi, Krishna Kulasekaran
Rating: U/A (India)
Release Dates: 14 Jul 2017
அடிதடி டீசர் என்று அனைவரின் கவனத்தினை ஈர்த்த திரைப்படம் பண்டிகை. சரவணன், கிருஷ்ணா, ஆனந்தி நடித்த பண்டிகை திரையருங்களில் கொண்டாட பட்டதா?
கிருஷ்ணா அனைவராலும் ரசிக்க படும் வித்தியாசமான கதைக்களத்தில் ரவுண்டு கட்டி அடிக்கும் வல்லவர். இந்த பண்டிகையும் அதை போலத்தான் அவருக்கு.
ஒரு பொருள் வேணும் என்றால் அடித்தால் கிடைக்கும் என்று சிறு வயது முதலே அடிதடியில் இருப்பவர் கிருஷ்ணா. இருப்பினும் அவருக்கு இது எல்லாம் வேண்டாம் நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்று திருந்தி ஒரு ஹோட்டலில் வேலை செய்கிறார்.
ஒரு ரௌடியின் மூலம் தன் சொத்துக்களை இழந்த சரவணன் இவரை சந்திக்கிறார். இவரின் பலத்தினை அறிந்து தான் இழந்த சொத்துக்களை மீட்க ரவுடி நடத்தும் சண்டை போட்டிக்கு கிருஷ்ணாவினை ஈடு படுத்துகிறார். காசு தேவைக்காக கிருஷ்ணாவும் அதற்க்கு சம்மதம் தெரிவிக்கிறார். இதற்கிடையில் ஆனந்தியுடன் காதல் கொள்கிறார். இறுதியில் அந்த சொத்துக்களை எடுத்தாரா? என்பது மீதி கதை.
ஒரு முழு நீள ஆக்சன் விரும்பிகளுக்கு இந்த படம் ஒரு பண்டிகை தான். சண்டை காட்சிகள் அபாரம். குறிப்பாக படத்தின் முதல் காட்சியில் வரும் சண்டை காட்சி அனைவரையும் சுண்டி இழுக்கிறது. ஆனந்தி பெரியதாக ரோல் இல்லை என்றாலும் அழகாக வந்து போகிறார். ஒளிப்பதிவு மிகவும் அருமை அதிலும் இருட்டான காட்சிகளில் ரொம்ப கச்சிதம்.
கருணாஸ் ஒரு காட்சி வந்தாலும் அதிரடி. சரவணன் மிக எதார்த்தமாக தன் நடிப்பினை வெளி படுத்தி உள்ளார். படத்தில் இவருக்கு மிக முக்கியமான கதாபாத்திரம். பாடல்கள் ஓகே ராகம். அனால் பின்னை இசை ரொம்ப மிரட்டல்.
ஒரு தரமான ஆக்சன் படம் பண்டிகை
Rating: 3/5