Review Overview
Rating
3.0/5 Complete Commercial Entertainment
Summary : அதிரடியான கமர்சியல் படம் ரசிகர்களுக்கு விறு விறு பயணம் இந்த சீறு
Seeru Movie Review
ஜீவா கதை தேர்வுகளில் மிக சிறந்தவர் ஆனால் கழிந்த சில படங்களில் அவர் கதை தேர்வு சரி இல்லாமல் இருந்தது. அதனால் ரத்தின சிவா இயக்கத்தில் கமர்சியல் பார்முலாவில் இறங்கி ஹிட் கொடுக்க முயற்சித்துள்ளனர். அந்த முயற்சி காய் கொடுத்தா இல்லையா?
கண்டிப்பாக கமர்சியல் ரசிகர்களுக்கு இது ஒரு விருந்து. படம் ஆரம்பம் முதலே விறு விறு என்று செல்கிறது. ஜீவா வழக்கமான கலகலப்பு வசனம் இளமை துரு துருவென்று இருக்கிறார். குறிப்பாக ஆக்சன் காட்சிகள் அடித்து நொறுக்குகிறார். தங்கை பாசம் காட்சிகளில் அனைவரும் ரசிக்கும் படியாக உள்ளது. சண்டை காட்சிகளிலும் சரி செண்டிமெண்ட் காட்சிகளும் சேரி இமான் தன் பின்னணி இசையில் அனைவரையும் கவர்கிறார்.
மிக வேகமாக செல்லும் திரைக்கதையில் ப்ளஷ்பக் கொஞ்சம் மெதுவாக நகர்கிறது. இருப்பினும் காட்சிகள் ரசிக்கும் படியாகவே உள்ளது. காமெடி காட்சிகள் பல இடங்களில் ஒர்கவுட் ஆகி உள்ளது. ஒளிப்பதிவு மிக அருமை.
மொத்தத்தில் ஒரு அதிரடியான கமர்சியல் படம் ரசிகர்களுக்கு விறு விறு பயணம் இந்த சீறு.