Review Overview
Rating
Pure treat for feel good movie lovers and family audience
Summary : எல்லா வயதினரும் ரசிக்கும் ஒரு காதல் கலந்த பீல் குட் மூவி அனைவரும் பார்த்து ரசிக்கலாம்
Thiruchitram balam Movie Review
Perfect love story with friendship and emotional bonding, Dhanush easily scored the entire movie and Nithya equally balnced with him especially last 20 minutes, Praksh raj and Bharathi raja awesome, Songs and BGM perfectly matched the movie, director planned to give feel good movie to the audience and succeed. Pure treat for feel good movie lovers and family audience.
நடிகர் தனுஷ் நடிப்பில் டைரக்டர் மித்ரன் ஆர் ஜவகர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியீட்டில் திரைப்படம் திருசிற்றம்பலம் இன்று வெளியாகியுள்ளது. தனுஷ் ரசிகர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள திரைப்படம் ட்ரெய்லர் வெளியான முதலே பில் குட் மூவி ஆக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் அந்த எதிர்பார்ப்பினை இத்திரைப்படம் பூர்த்தி செய்ததா
டெலிவரி பாய் வேடத்தில் தனுஷ் வருகிறார் பல வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு காரணத்தினால் தனது தந்தையான பிரகாஷ்ராஜ் இடம் பேசாமல் இருக்கிறார் அப்போதிருந்தே நித்யா மேனன் இவருடைய நண்பராக வருகிறார் மற்றும் இவருடைய அனைத்து விஷயங்களிலும் அவர் கலந்து கொள்கிறார்
இந்நிலையில் ஒரு நாள் தனது பள்ளிப்பருவ காதலியான ராசி கண்ணா வை தனுஷ் சந்திக்கிறார் பார்த்தவுடன் அவரிடம் காதல் கொள்கிறார் அந்த காதல் நிலைக்காமல் சில நாட்களிலேயே ராசி கண்ணா காதலை ஏற்க மறுக்கிறார் அதன்பிறகு சில நாட்கள் கழித்து சொந்த ஊரில் பிரியா சந்திக்கிறார் அந்த காதலும் தன் கைகூடாமல் போகிறது
இதனால் வருத்தமடையும் தனுஷ் தன் தாத்தாவான பாரதிராஜாவிடம் தன் சோகக் கதையைக் கூறி புலம்புகிறார் அதற்கு அவர் நித்யா மேனனின் காதலிக்குமாறு கூறுகிறார் இந்த யோசனையை எடுத்துக்கொண்டு நித்யா மேனனை காதல் புரிய ஆரம்பிக்கிறார் இந்த காதல் நிறைவேறியதா என்பது இந்த திருச்சிற்றம்பலம்
சும்மாவே இந்த மாதிரி கதைகளில் தனுஷ் பின்னி பெடல் எடுப்பார் அதிலும் நகைச்சுவை கலந்த காதல் கதை என்றால் சொல்லவே வேண்டாம் குறிப்பாக படத்தில் நித்யா மேனன் அவருக்கு இணையாக நடித்துள்ளார் அதிலும் கடைசி இருபது நிமிடங்கள் தனுஷே மிஞ்சும் அளவிற்கான நடிப்பு அவரைத் தவிர அனைத்து கேரக்டர்களும் தங்களது பங்கினை சிறப்பாக செய்துள்ளனர் அதிலும் பிரகாஷ்ராஜ் பாரதிராஜா சிறப்பான நடிப்பு இயக்குனர் ரசிகர்களுக்கு ஒரு தொய்வில்லாத பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய ஒரு பீல் குட் மூவி கொடுக்க வேண்டும் என்பதினை முழுமூச்சோடு செய்துள்ளார் அதிலும் திரைக்கதையை மிக வலுவாக செய்துள்ளார் பாடல்கள் அனைத்தும் படத்திற்கு தேவையான இடங்களில் சிறப்பாக அமைத்துள்ளார் இயக் அணிருத் பல இடங்களில் ஒளிப்பதிவு நம்மளை கட்டிப்போடுகிறது
எல்லா வயதினரும் ரசிக்கும் ஒரு காதல் கலந்த பீல் குட் மூவி அனைவரும் பார்த்து ரசிக்கலாம்.