Review Overview
3/5
Summary : படத்தில் கூறிய கருத்துக்கு சபாஷ். முழுக்க முழுக்க ஒரு இயற்க்கையின் ரசனையை கூறும் படமாக உள்ளது வனமகன். குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்.
Vanamagan Movie Review
Release Date: 23 Jun 2017
Duration: 2 hrs 20 mins
Cast: Jayam Ravi, Sayyeshaa Saigal
Rating: U (India)
Genres: Action, Adventure
Release Dates: 23 Jun 2017
எத்தனையோ படங்கள் வந்தாலும் சில வித்தியாசமான படங்களில் நடிப்பவர் ஜெயம் ரவி. அதுபோல இதுவும் அவருக்கு ஒரு வித்தியாசமான படம் தான். கும்கி படம் போல இதுவும் முழுக்க முழுக்க பசுமையாக மட்டும் இல்லாமல் நகரமும் சேர்ந்த ஒரு மகிழ்ச்சி பயணம்.
தீவுகளில் வாழும் மலைவாழ் மக்களாக வருகிறார் ஜெயம் ரவி. இவரை சார்ந்த மக்களுக்கு சிலரால் இடைஞ்சல்கள் வருகிறது. ஒரு கட்டத்தில் இது பெரிதாக பெரும் ஆபத்தாக மாற கதை சூடுபிடிக்கிறது. ஒரு பெரிய பணக்காரனின் மகளாக வரும் ஆயிஷா சுற்றுலா போகும் பொது ஒரு திருப்பமாக ஜெயம் ரவி அவருடன் சென்னை வருகிறார்.
முதலில் ஜெயம் ரவியினை வெறுக்கும் ஆயிஷா இறுதியில் அவரை காதல் கொள்கிறார். ஜெயம் ரவி இயல்பாக செய்யும் அனைத்தும் குறும்பு நிறைந்து காணப்படுகிறது. ஒரு கட்டத்தில் ஜெயம் ரவியினை போலீஸ் பிடித்து செல்ல அதன் பிறகு என்ன ஆனது. என்பது கிளைமாக்ஸ்.
படம் ஆரம்பம் முதலே அனைவரின் கவனத்தையும் ஜெயம் ரவி கவர்கிறார் முழுக்க முழுக்க அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். படத்தின்naayagi ஆயிஷா படம் முழுக்க வருகிறார். சில இடங்களில் சிறந்த நடிப்பினை வெளி படுத்துகிறார். வழக்கம் போல தம்பி ராமையா கலக்கல்.
படத்தின் பெரிய பலம் என்று பார்த்தல் விசுவல் சொல்லியே ஆகா வேண்டும். அந்த அளவுக்கு நேர்த்தியாக உள்ளது. ஹாரிஸ் இசை ஓகே ராகம் என்றாலும். சில இடங்களில் மிக கச்சிதமான பின்னணி இசையினை கொடுத்துள்ளார்.
படத்தில் கூறிய கருத்துக்கு சபாஷ். முழுக்க முழுக்க ஒரு இயற்க்கையின் ரசனையை கூறும் படமாக உள்ளது வனமகன். குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்.
Rating: 3/5