Templates by BIGtheme NET
Home / Review / Anbarivu Movie Review

Anbarivu Movie Review

Anbarivu Movie Review Release date 7 January 2022 Running time 165 minutes Directed by Aswin Raam Produced by T. G. Thyagarajan Senthil Thyagarajan Arjun Thyagarajan வழக்கமான கதைதான் அப்பாவிடம் வளரும் ஒரு குழந்தை அம்மாவிடம் வளரும் ஒரு குழந்தை இறுதியில் இந்த இரண்டு இரண்டு குழந்தைகளும் சேர்ந்து எப்படி அப்பா அம்மாவை சேர்த்து வைத்து என்பதே கதையின் கிளைமாக்ஸ் முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் ஆதி அவரின் நடிப்பினை சிறப்பாக செய்துள்ளார் சில காட்சிகளில் அவரின் நடிப்பு செட் ஆகவில்லை என்றாலும் சென்டிமெண்ட் காட்சிகளில் நிறையவே ஸ்கோர் செய்திருக்கிறார், பாடல்கள் பெரிதாக இல்லை என்பதால் படத்தில் பெரியதாக தெரியவில்லை கிராமத்து காட்சிகளும் வெளிநாட்டு காட்சிகளும் கண்களுக்கு இதமளிக்கும் ஒளிப்பதிவில் சரியாக செய்திருக்கிறார் பாடல்கள் மற்றும் பின்னணி அனைத்தும் வழக்கமான ஆதியின் இசையில் எங்கோ கேட்டது போன்று உள்ளது, படத்தில் இரு கதாநாயகிகள்…

Review Overview

Rating

3.25/5 Cheerful family entertainment movie

Summary : கமர்சியல் ஆன குடும்ப கதை பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு இந்த அன்பு அறிவு ஒரு வெற்றிப்படம்

User Rating: Be the first one !
66

Anbarivu Movie Review

Release date 7 January 2022

Running time 165 minutes

Directed by Aswin Raam

Produced by T. G. Thyagarajan Senthil Thyagarajan Arjun Thyagarajan

வழக்கமான கதைதான் அப்பாவிடம் வளரும் ஒரு குழந்தை அம்மாவிடம் வளரும் ஒரு குழந்தை இறுதியில் இந்த இரண்டு இரண்டு குழந்தைகளும் சேர்ந்து எப்படி அப்பா அம்மாவை சேர்த்து வைத்து என்பதே கதையின் கிளைமாக்ஸ்

முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் ஆதி அவரின் நடிப்பினை சிறப்பாக செய்துள்ளார் சில காட்சிகளில் அவரின் நடிப்பு செட் ஆகவில்லை என்றாலும் சென்டிமெண்ட் காட்சிகளில் நிறையவே ஸ்கோர் செய்திருக்கிறார், பாடல்கள் பெரிதாக இல்லை என்பதால் படத்தில் பெரியதாக தெரியவில்லை கிராமத்து காட்சிகளும் வெளிநாட்டு காட்சிகளும் கண்களுக்கு இதமளிக்கும் ஒளிப்பதிவில் சரியாக செய்திருக்கிறார் பாடல்கள் மற்றும் பின்னணி அனைத்தும் வழக்கமான ஆதியின் இசையில் எங்கோ கேட்டது போன்று உள்ளது, படத்தில் இரு கதாநாயகிகள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை சரியாக செய்துள்ளனர் அவர்கள் பெரிதாக ஸ்கோர் செய்யும் அளவிலான நடிப்பில் இல்லை

விதார்த் முதன் முறையாக வில்லன் வேடத்தில் தோன்றியுள்ளார் அவருக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சரியாக செய்துள்ளார் ஆனால் இன்னும் கொஞ்சம் வில்லனிடம் நடிப்பினை கொடுக்கும் அளவிற்கு கதையினை கொடுத்திருக்கலாம் இயக்குனர், படத்தின் முக்கிய பலமாக குடும்ப ஒற்றுமையை சேர்க்கும் வகையிலான வசனங்களும் மற்றும் எமோஷனல் காட்சிகளும் அமைந்திருக்கிறது

எப்பொழுதும் ஆதி இளைஞர்களை கவரும் வகையில் கதைகளை தேர்வு செய்து அதில் அதிரடியான காட்சிகளை சேர்ப்பது வழக்கம் முதல்முறையாக அவர் குடும்ப அமைப்பிலான கதையை தேர்ந்தெடுத்து அதிலும் இரட்டை வேடத்தை தேர்ந்தெடுத்து முடிந்த அளவு இரண்டு கதாபாத்திரங்களுக்கும் தேவையான வித்தியாசத்தைக் கொடுத்து நடித்துள்ளார், படம் ஆரம்பம் முதலே அடுத்தடுத்த காட்சிகள் என்று நகர்ந்துகொண்டே இருக்கிறது அதற்கு தேவையான திரைக்கதையை சரியாக தந்திருக்கிறார் இயக்குனர் ஆனாலும் இன்னும் கொஞ்சம் வேகத்தினை அதிகரிக்கும் காட்சிகளை சேர்த்து இருக்கலாம்

மொத்தத்தில் ஒரு கமர்சியல் ஆன குடும்ப கதை பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு இந்த அன்பு அறிவு ஒரு வெற்றிப்படம்

Movie Rating: 3.25/5

About Guru Mano

ăn dặm kiểu NhậtResponsive WordPress Themenhà cấp 4 nông thônthời trang trẻ emgiày cao gótshop giày nữdownload wordpress pluginsmẫu biệt thự đẹpepichouseáo sơ mi nữhouse beautiful