Review Overview
Rating
3.5/5 காதலை இத்தனை விதங்களில் காட்டி அனைவரையும் கவர்கிறது இந்த C/O காதல்
Summary : படத்தில் வரும் பலர் நமக்கு அறிமுகம் இல்லாத ஆளாக இருந்தாலும் ஒரு இடத்தில் கூட அந்த உணர்வு நமக்கு வராத படி நடித்துள்ளனர்
Care Of Kaadhal Movie Review
A romantic film directed by Hemambar Jasti, starring Deepann, Vetri and Mumtaz Sorcar in the lead roles
Cast: Arya, Deepann, Mumtaz Sorcar, Nishesh
Crew: Hemambar Jasti (Director), Guna Sekaran (Director of Photography), Sweekar Agasthi (Music Director)
Rating: U/A (India)
தெலுங்கு சினிமாயில் பாராட்டுகளை வாரி குவித்த படத்தின் ரீமேக். இத்திரைப்படத்தில் வெற்றி, தீபன், அய்ராமற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பள்ளிக்காதல், பருவக்காதல், இளம்காதல் என காதலின் அனைத்து அம்சங்களையும் காதல் கலந்து சொல்வதே இந்த C/O காதல். ஐம்பது வயதினை அடிக்க போகும் தீபன் ஒரு அரசாங்க அதிகாரியாக வருகிறார். ஆனால் கல்யாணம் ஆகவில்லை அதனால் அனைவரின் கேலிக்கும் ஆளாகிறார். தன்னுடன் பெண்ணையே காதலித்து அதனிடையே வேறு மூன்று காதலும் இடையில் கூறி அனைத்து காதல் கதைகளும் என்ன ஆனது என்கிறது C/O காதல்.
குறிப்பாக இசையமைப்பாளர் பின்னை மற்றும் பாடல்களில் வெகுவாக கவர்கிறார். ஒளிப்பதிவு மிக அழகா உள்ளது. காதலை நம் கண் முன்னே அவ்வளவு அழகாக காட்டுகிறார். காதல் காட்சிகள் புதிய முறைகளை காட்டியுள்ளனர் அனைவரும் ரசிக்கும் படியாக உள்ளது.
வசனங்கள் அனைத்தும் ரசிக்கும் படி உள்ளது, குறிப்பாக காதல் குறித்து பேசும் அனைத்து வசங்களும் ரசனை. படத்தின் ஆரம்பம் வரை ஒரே சீரான வேகத்தில் செல்கிறது எங்கும் தொய்வு ஏற்படவில்லை.
காதலை இத்தனை விதங்களில் காட்டி அனைவரையும் கவர்கிறது இந்த C/O காதல்