Templates by BIGtheme NET
Home / Review / Dejavu Movie Review

Dejavu Movie Review

Dejavu Movie Review Perfect thriller movie with strong characters, Arulnithi once again proved he is the strong in script selection, fantastic screenplay with different story attempt, everyone did their role perfectly especially MS baskar dubbing and cameo role kali venkat. Pure treat for thriller fans வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் கெட்டிக்காரர் அருள்நிதி அதிலும் திரில்லர் சப்ஜெக்ட் என்றால் அவருக்கு அல்வா சாப்பிடற மாதிரி, அந்தவகையில் தேஜாவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை கொண்டிருந்தது அதனை இந்த திரைப்படம் பூர்த்தி செய்து இருக்கிறதா என்பதை விலாவாரியாக காண்போம் கதை சுருக்கம் என்று பார்த்தால் சுப்பிரமணி அச்யுத் குமார் எனும் ஒரு கதாசிரியர் அவர் தான் எழுதும் கதைகளில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் உண்மையிலே வந்து தன்னை மிரட்டுவதாக சொல்லி காவல் துறையில் ஒரு…

Review Overview

Rating

Perfect thriller entertainment with strong characters

Summary : ஒரு சிறந்த திரில்லர் திரைப்படம் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு நல்ல விருந்து

User Rating: Be the first one !
66

Dejavu Movie Review

Perfect thriller movie with strong characters, Arulnithi once again proved he is the strong in script selection, fantastic screenplay with different story attempt, everyone did their role perfectly especially MS baskar dubbing and cameo role kali venkat. Pure treat for thriller fans

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் கெட்டிக்காரர் அருள்நிதி அதிலும் திரில்லர் சப்ஜெக்ட் என்றால் அவருக்கு அல்வா சாப்பிடற மாதிரி, அந்தவகையில் தேஜாவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை கொண்டிருந்தது அதனை இந்த திரைப்படம் பூர்த்தி செய்து இருக்கிறதா என்பதை விலாவாரியாக காண்போம்

கதை சுருக்கம் என்று பார்த்தால் சுப்பிரமணி அச்யுத் குமார் எனும் ஒரு கதாசிரியர் அவர் தான் எழுதும் கதைகளில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் உண்மையிலே வந்து தன்னை மிரட்டுவதாக சொல்லி காவல் துறையில் ஒரு வழக்கு கொடுக்கிறார், இதனை கொஞ்சம் கூட எடுத்துக் கொள்ளாத போலீசுக்கு பெரும் அதிர்ச்சி பின்பு காத்துக்கொண்டிருக்கிறது, ஏனென்றால் அடுத்த நாள் காலையிலேயே அந்த சுப்பிரமணி என்னும் நபரை போலீஸ் கைது செய்ய மர்மம் அங்கிருந்து தொடர்கிறது.

அவர் எழுதிய கதையில் போலவே ஒரு பெண் மர்ம நபர்களால் கடத்தப்படுகிறார் அந்த கடத்தப்பட்ட பெண் மதுபாலாவின் மகள் என்பதால் இந்த விஷயம் செய்திகளில் வருகிறது ஆனாலும் தனது மகளை கடத்தப்படவில்லை என்று கூறி மதுபாலா இந்த வழக்கினை மறைமுகமாக தேடத் துவங்குகிறார், இந்த வழக்கிற்கு விக்ரமை அதிகாரியாக அருள் நிதியினை  நியமனம் செய்கிறார். ஒருபுறம் இது அனைத்தும் நடந்து கொண்டிருக்கிற இந்த அனைத்து விஷயங்களையும் தான் நேரில் பார்த்தது போல எழுதிக் கொண்டிருக்கிறார் கதை ஆசிரியர் இறுதியில் அந்தப் பெண்ணினை அருள்நிதி கண்டுபிடித்தாரா இல்லையா அந்த கதாசிரியரின் கதையின் முடிவில் என்ன நடக்கிறது என்பதனை மர்ம முடிச்சுகள் உடன் கூறியுள்ளனர்.

முன்பு சொன்னது போலவே அருள்நிதி தனது கேரக்டரை முழுவீச்சுடன் செய்துள்ளார் குறிப்பாக முழு படத்திலும் அவரை கடந்து செல்வது போல் உள்ளது இயக்குனர் தன் முதல் படத்திலேயே இந்த அளவு திரைக்கதை அம்சமுள்ள கதையை தேர்ந்தெடுத்தமைக்கு வாழ்த்துக்கள் அதிலும் சில இடங்களில் திரைக்கதை மிக நேர்த்தியாக நகர்த்தியுள்ளார்,

படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் அவர்களின் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார் அதிலும் போலீசாக வரும் மதுபாலா, கதை ஆசிரியராக வரும் அச்யுத் குமார் அதிலும் குறிப்பாக கதையாசிரியர்கள் டப்பிங் செய்து எம்எஸ் பாஸ்கர் மிகவும் கச்சிதமாக பொருந்தி உள்ளார் மிகக் குறைவான காட்சிகளிலேயே வந்தாலும் காளி வெங்கட் அனைவரையும் கவர்ந்து இருக்கிறார்,

படம் ஆரம்பம் முதலே அனைத்து ரசிகர்களின் தன் பின்னணி இசையால் கட்டிப் போடுகிறார் ஜிப்ரான் மற்றும் படத்தின் எடிட்டருக்கு பாராட்டுகள் பெரிதாக படத்தில் எந்த இடத்திலும் தொய்வு இல்லாததினால் கடைசி வரை விறுவிறுப்பாக சொல்வது போன்ற காட்சிகளின் நகர்த்தியுள்ளார் இயக்குனர்

ஒரு சிறந்த திரில்லர் திரைப்படம் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு நல்ல விருந்து.

Movie Rating: 3.25/5

About Guru Mano

ăn dặm kiểu NhậtResponsive WordPress Themenhà cấp 4 nông thônthời trang trẻ emgiày cao gótshop giày nữdownload wordpress pluginsmẫu biệt thự đẹpepichouseáo sơ mi nữhouse beautiful